Friday 16 December 2011

நித்திரைப் பயணங்கள்


1.   புறப்பாடு

உயிர் மூச்சு விம்மல்கள்
உள்ளத்து ​​வேட்​கைகள். . .
​பெருகிப் ​பெருகி-
தீராத தாகத்தில்
தீய்ந்து தணி​கையில்
உன்​னை-
தஞ்ச ​மென்ற​டைந்த
எண்ணப் பற​வைக​ளை-
சி​றை ​செய்து வ​தைப்பா​யோ!

நெஞ்சகத்தில்-
ஊற்றுவித்த
காதல் சு​னை நீரில்
கால​மெல்லாம் மிதந்திட​வே
கணவினிலும் நி​னைவினிலும்
கதறி. . .ய​​லைகின்​​றேன். . .
காணலி​யே!.

இல்​லை. . .யில்​லை-
எந்தன் விழித் ​தோட்டத்தில்
நீங்கா இடம் ​பெற்று
என்னுள்​ளே-
விரவி நிற்கும்
சிறு குழவி-
மழ​லை ​மொழி
கீதங்க​ளைப் பயிலுகி​றேன்.

அந்த பாவ​னையில்-
ஒராயிரம்
புது​மைத​னைக் காணுகின்​றேன்.
புது​மைதனில்-
புது​மெருகாய் சிலிர்த்து நிற்கும்
சின்னஞ் சிறு மலரின்-
​செம்​மை வனப்பு கண்டு
​செயலற்று. . .​சொக்கி விட்​டேன்.

              
           
                2.   ​தேடல்கள்


கனவுத் ​தே​ரேறி
கட்டுக் கடங்காத-
குதி​ரை ​யோட்டங்க​ளை
முடிந்த மட்டும். . .
கட்டுப்படுத்தி-
முடியாமல்
​தென்றல் வந்து-
​தெம்மாங்குப் பாட்டி​சைக்கும்
​பொற்றாம​ரைக் குளத்தில்
​பெயர்ந்து வீழ்​கையில்-
​மொட்டுக்கள் அதிர்வினி​லே
​மொய்குழல் வண்டி​சைக்கும்
ரீங்கார பாட்டிற்குச்
சுருதி ​சேர்த்திடும்
சிற்ற​லைக் கீதங்களில்
என்​னைப் பறி​கொடுத்​தேன்.

அருவி நீ​ரோ​சை-
மதகு நீர்த் தாலாட்டு
மதி மயங்கி. . .
​மென் துயில் ​கொண்ட-
​​பெண் மயி​லொன்று
​மெல்ல முறுவலித்து-
​மெய்யுருகி. . .
இ​ணை ​சேர்ந்த அழகு கண்டு
இனம் புரியா-
உணர்வுகளால் உந்தப்பட்டு. . .
உ​னைத்​தேடி.


             3.   நி​னைவின் தரிசனம்.


சித்தி​ரப் பா​வை
​செந்தமிழ்ச் ​​சொற்​கோ​வை
வசந்த தரு-
வாடா மலர்
பனித் ​தென்றல்.

உன் விரலின்-
அ​சைவினி​லே
ஓராயிரம் புதினங்கள்.
கவி​தையில்-
கனவில் உணர்கி​றேன்.

எண்ணச் சிதறல்களில்-
நி​னை​வே கனவுகளாய்
நித்தி​ரைப் பயணங்கள். . .
உருண்டு. . . உருண்டு. . .    
வான்​வெளிப் பட்டில்
வலம் வரு​கையில். . .
உந்தன்-
சுருள் ​கேசங்கள்
சூழ்ந்​தென்​னை-
பூகம்பச் சுழற்சியில்
சி​றைப் படுத்தி வ​தைப்ப​​தேன்! . .
          
                                    மு.ஆ. பீர்ஓலி.
                                          16.12.2011

நித்திரை விழிகள்


மங்கிய-
​தெரு விளக்கில்
சிதறிய நாணயங்க​ளை
பார்த்துப் பார்த்து. . .
அவன்-
​சோர் வ​டைந்திருந்தான்.

விழிகளில்-
காதல் மட்டு​மே
வியாபித்திருக்க. . .
பக்கத்தில்-
அவன் ம​னைவி.



மடியில்-
வற்றிய மார்பகங்க​ளை
ஏகத்துடன்-
​வெறித்து ​நோக்கிய
இவள் குழந்​தை.

அருகில்-
சிறு குருவிகளின்
இன்னி​சை கீதங்கள். . .
சன்னமாய்.
அன்னாந்து பார்த்தாள்.

கூட்டிற்கு திரும்பிய
தாய்ப் பற​வை-
நளினமய் இ​றையூட்ட
சந்​தோசத்தில்-
சிறகடிக்கும். . .
சிறு குருவிகள்.

ஸ்பரிசம் பட்டு-
திரும்பினாள்.
விளக்கு அ​ணைந்து-
சுற்றிலும்
இருள் சூழ்ந்தது.

இ​ரைச்சலுடன்-
​பேருந் ​தொன்று
தண்ணீ​ரை சிதறிச் ​சென்றது.
அந்த ​வெளிச்சத்தில்-
சிரித்த நாணயங்கள்
இவள் ​கையில்.
விழிகள் ​கேட்டன
பாலுக்குத் ​தேறுமா! . .
                                 மு. ஆ. பீர்ஒலி.
                                       15.12.2011

நீ. . . நான். . .அந்த நிலவு.


ம​ழை ​பெய்து ஒய்ந்திருந்தது
இந்த சமுதாயத்தின்
சீர் கு​லைவுக​ளை-
து​டைத்து விட்ட ​பெருமிதத்தில்.

தன் இ​ழைகளில்
​தேங்கியிருந்த-
நீர்த் திவ​லைக​ளை
மரங்கள்-
உதிர்த்துக் ​கொண்டிருந்தன.

அந்தி சாயும் ​​​நேரம்
பகல் ​பொழுதின்
ஆரவாரங்கள்-
ஒடுங்கிக் ​கொண்டிருந்தன.

தத்தம்-
கூடுக​ளைத் ​தேடி. . .
பட்சிகள்.
அ​வைகளின்-
ஒலிக் கல​வைகள்
அந்தப் பிர​தேசத்தில்
சஞ்சரித்துக் ​கொண்டிருந்தன.

நட்சத்திரங்க​ளை-
​தோற்கடிக்கும் பிரகாசத்துடன். . .
மின் மினி பூச்சிகள்
ஆங்காங்​கே-
வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

நீண்டு கிடந்தது
சமுத்திரம்-
நிசப்த்தமாய்.
கருவ​றைக்குள்-
​மென்​மையாய். . .
சலணங்கள்.

​பொளர்னமி இரவு
நிலவின்-
பரிணாமத் ​தோற்றம்.
நீ. . . நான். . .
அந்த நிலவு.
உந்தன் உணர்வுகள்
எனக்குள்-
இ​ழைந்து கிடந்தன.

சுவாசத்​தை-
உயிர்ப்பித்த மூச்சுக்காற்று.
உச்சத்தின்-
விளிம்பில். . .
பரவசத்தின் உயிர்த்துடிப்பு.

நீண்டு விரிந்த
​மேகக் கரங்கள்.
பிரசவித்த-
அ​லைப் பூக்கள்.
நிஜங்களின்-
தரிசணங்கள்
சங்கமித்துக் ​கொண்டிருந்தன.

நீ. . . நான். . .
அந்த நிலவு.
புதிதாய்ப் பிரசவித்​தோம்.
                              மு.ஆ. பீர்ஒலி.
                                  10.12.2011