Thursday 29 September 2011

பொய் மானைத் தேடி. . .


பா​லைவனம்
சுட்​டெறிக்கும் ​வெப்பம்
பூத்துச் சிரிக்கும்
வர்ணமாய் ​ரோசாக்கள்.

​தொ​லை தூர
கானல் நீ​ரோ​டை
​பொய்​கையில்
மூழ்கி. . .
முத்​தெடுக்கும் ஆ​சை.

பனி மூட்டம்
முக்காடிட்ட நிலவு
கண் சிமிட்டிக் ​கொண்டிருக்கும்
நட்சத்திரங்கள்.

கருத்து கிடக்கும்
நீள் கடல்
மனதின் தாக்கம்
விம்மல்கள். . .
விசுவரூப ​வெளிப்பாடு.

நிறமாறிக் ​கொண்டிருக்கும்
தி​ரைச் சீ​லை. . .
​பொய்முகம்
விடுபட்ட நிலவு
இன்னமும் ​தேடுகி​றேன்.
                                   மு. ஆ. பீர்ஓலி. 
                                              28.09.2011
                                  

சொப்பணங்களில் தொலைந்த முகவரி. . .


நில​வே !
உன்​னை ​நேசித்த ​பொழுது
என்​னை​யே
​நேசித்​தேன். . .
களங்கமற்ற உனதன்பில்
மன​தைத் ​தொ​லைத்து.
உனக்குள்
நிகழ்ந்த. . .
அந்த ​வேறுபாடு
வ​தைத்தது.
எனக்கு. . .
நா​​னே ​வேறுபட்​டேன்.

மல​ரே !
உந்தன் குளிர்ச்சி​யை
சுவாசித்​தேன். . .
மூர்ச்​சையாகிப் ​போனாய்.
அன்பின்​ வெளிப்பா​​டென
மகிழ்ந்து ​போ​னேன்
உண்​மை​யை அறியாமல்.

​சொப்பணங்களில்
மட்டு​மே !..
என்​னைக் கண்டு. . .
கண்டு
சுவாசங்கள் உஸ்னமாகி
மூர்ச்​சையானா​யோ !..
நிஜத்​தை தரிசிக்க
மனமின்றி.
என்​னை​யே ​வெறுத்​தேன் . . .
உன்​னை ​நேசித்ததால்.​
                                   மு. ஆ. பீர்ஓலி. 
                                               29.09.2011

Tuesday 27 September 2011

திக்கற்ற பாதையில். . .


கவி​தை​யே !..
ஒரு மரணத்தின்
நிஜத்​தை கண்டும்
கலங்க வில்​லை​யே. . .

இந்த பிரபஞ்சம்
​தொ​லைந்த. . .
​தேடல்கள்
வடுக்களாய் ஏமாற்றங்கள்.
​பொய் முகங்கள்
சமாதியான நிஜங்கள்
சி​தைந்து​ போன
உண்​மைகள் . . .
​மென் உணர்வுகள்.

​​
தோழி​யே ! . .
மரணம்
ஒரு நீள் துயி​லென
​நேசித்த​னை​யோ ! . .
அந்த கரங்களின்
மிருதுவான அ​னைப்பில்
சுகம் கண்டு.

முன் பனிக்காலம்
புல் ​வெளி
துயில் ​கொண்டிருந்த
பனித் திவ​லைகள்
​செங்கதிர்ப் பட்டு
சுவர்க்க பிர​வேசம்.

மா​னே !
உயிர்த்​ தெழு
அத்து​னை கல்ல​றைக​ளையும்
தகர்த்து விடு. . .
சுவடுகளின்றி.

நில​வே !
உன்​னை ம​றைத்திருப்பது
​மேகக் கூட்டங்கள்தான்
ம​லையல்ல. . .
மனதிற்குள்
பு​தைந்த​வை அ​னைத்தும்
​நெருஞ்சி முட்கள்தான்.
அ​னைத்​தையும்
க​ரைத்து விடு. . .
பனித் துளிகளாய்.

நிஜத்தின்
தரிசணங்க​ளை
​தேடி… ​தேடி…
​சொப்பணங்க​ளை மட்டு​மே
சுவாசித்து. . .
மூர்ச்​சை !

படரத் துடிக்கும்
இளந்தளிர். . .
அன்பின் அழுத்தங்கள்
சுவாசங்கள்
​தேடல்களாய். . .
மீண்டும் ஒரு பிரசவம்.

                               
                                      மு. ஆ. பீர்ஓலி. 
                     27.09.2011


உதயத்தை தேடி. . .


பிரிகி​றேன்
நம்பிக்​கையுடன் . . .
மரணத்திற்கு முன்பு
உன் தரிசனம்
கி​டைக்கும்
என்ற தவத்துடன்.
இல்​லை​யெனில்
உன்
கண்ணீர் மலர்க​ளை
​தெளித்து விடு . . .
என்
கல்லறையில்
அதன் உஸ்னம்
என்​னை
பிரசவித்து விடும். . .
                               மு. ஆ. பீர்ஓலி. 
                     27.09.2011

Sunday 25 September 2011

The Ironies that pervaded the Human mind

I woke up
disturbed-
And frightened
with a dream
to hear the clock struck two
and a dog howls.
I looked around-
and around me
Nothing but darkness
and darkness only
that I couldn't see anything.
With fear
and frustration
I contemplate the dream
that hath disturbed me-
body and soul.


I saw some four
demon like figures
encircling me
and waiting-
Waiting for no reason ?...


The First one that stood
between-
The Heaven and Hell
with projected teeth
and blood-shot eyes
recited
as though in fancy
something that I couldn't
recapitulate.

The one
right to her
half hidden in mist
with one bosom
only one-
that heaves enormously
looked heavily
into my eyes
that sight
I couldn't stand and stare.


Another one
playing a Flute ? - or some
musical instrument
plays a horrible tune
that suddenly falleth and riseth
As the swaying of her hip.


The Last one-
the prettiest of all
of course-
the beautious
hath sunken eyes
and nostrils like channels
and three she hath
instead of two.
And leans towards me
as though to whisper something to me...


I shook my head
And my body did treamble
and burning
I looked again round and round
And nothing visible
Except shades
of darkness
And of hopelessness.

                                                                          M.A. Peeroli, M.A. B.L.,
                                                                                   
                                                                                      25 th Sep 2011.






 

Friday 23 September 2011

மலரவிடப் போவதில்லை. . .


என் இதய
சாம்ராஜ்யத்தின்
கனவு ​தேவ​தை​யே ! . .
ஆதவனின் ஆதிக்கம்
சுருண்ட பின்
இந்த மனத் ​தோட்டத்தில்
அரும்பிடும். . .
கனவு மலர்க​​ளே ! . .
நீ . . .
வி​​தைத்த
நடசத்திர அரும்புகள்
நிலவாக மலர்ந்த ​பொழுது
என் . . .
இ​மைக் கூட்டுக்குள்
நளினமாடும்
பார்​​வைகளின் அ​சைவுகள்
உதிர்த்த . . .
மந்திர வார்த்​தைகள்
மயக்கும் வர்ணங்களாய்
ம​னோகரத்துவம் . . .
அழகின் அ​சைவுகள்
சங்கீதம்
இ​சைத்துக் ​கொண்டிருக்க . . .

எங்​கோ ! . .
​தொ​லை தூரத்தில்
‘இராப் பிச்​சைக்காரனின்’
ஈனக் கதறல்கள்
சாக்காட்டு அ​மைதியில்
சமாதியாகிக் ​கொண்டிருக்கிற​தே ! . .

உன்னு​டைய
அரும்புகள் . . .
துளிர்த்துக் ​கொண்டிருக்கும் ​பொழுது
அவன் மலர்கள்
கருகிக் ​கொண்டிருக்கிற​தே ! . .

ஒ . . .
கனவு​ தேவ​தை​யே ! . .
என்​னை
வ​தைத்துக் ​கொண்டிருக்கும்
​சொர்க்கபுர நாயகி​யே ! . .
உந்தன்
கண்களுக் ​கெதிரி​லே​யே . . .
சி​தைந்து ​கொண்டிருக்கும்
அவன் வாழ்வு
புலரும் வ​ரை . . .
என்
மனத் ​தோட்டத்தில்
பார்​வைகள்
வி​தைத்து ​சென்ற
காதல் அரும்புக​ளை
மலரவிடப் ​போவதில்​லை. . .

                                 
மு. ஆ. பீர்ஓலி.
                                               23.09.2011





Wednesday 21 September 2011

தியானங்கள் தொடர்கின்றன . . .


ஞானியவள்
முழுதும் துறந்தவள் ?
ஞானப் பிள்​ளைக்காய்
தவம் ​செய்தாள்.

விரித்த மஞ்சங்கள்
புலராத ​வே​ளையில்
யுகம் யுகமாய் . . .
அட்சய பாத்திரம் !
​பெருகிக் ​கொண்டிருக்கும்
​பொன் வயல்கள்
எத்து​னை . . .
அறுவ​டைகள்.
அழுக்​கேறிய
பிச்​சைப் பாத்திரம்
சு​வையரும்புகள்
சிதைந்து விட்டன​வே !..
துளிர்ந்த அரும்புகள்
த​ழைக்கும் முன்ன​மே . . .
கிள்ளி விடும்
​‘பெரிய’ மனிதர்
​‘யோகி’ யாக்கியவர்கள்
‘ஞானம்’ ​பெற
வி​​ழைகிறார்கள் . . .
தீர்க்க தரிசனம் ​தொடர்கிறது .

இவ​​ளோ !
​போதி மரம் விட்டு
​போ​தைக் கரம் தாவி
ஞானம் ​வேண்டி
​வேள்வி நடத்துகிறாள் . . .
தீர்​வை முடியவில்​லை
தினமும்தான்
தியானங்கள் ​தொடர்கின்றன​வே!..

( பின் குறிப்பு )
எலும்பில் குடி​கொண்ட
‘பாஸ்​​​பேட்டு’ தாதுக்கள்
எரியும் சுவா​லையில் . . .
​‘கொள்ளிவாய்ப் பிசாசுகளாய்’
பிறவி ​யெடுக்கும் வ​ரை
அவள்
‘சர்​வேகல்’
​பெருகிக் ​கொண்​டேதானிருக்கும்
அக்கினிச் சுவா​லையில்
​மெழுகாய் ஒளிரும்
​மெய்யான ஞானி !
ஞானம் ​​பெறுவ​தெப்படி ?...
                                   மு. ஆ. பீர்ஓலி.
                                             20.09.2011

சிறகுகள் . . .


ஓரு வித​வை ​பெண் ​போல்
​வெள்​ளைத் தாளில்
மட்டு​மே 
குடியிருந்தவள்
சிறகுகள் தந்து
கவி​தையாய் மலர்ந்தாள்.
தற்காலிக
சுய ​​சோகங்கள்
க​லைந்தன !
தூது வந்தது . . .
உன் வீட்டு வாசலில்
வந்து
விழுந்து கிடப்பது
அழ​வைப்பதற்காகவா !
மடியில்
முகம் பு​தைத்து
அழுவதற்காக​வே,
என்ன நி​னைத்து
எழுதினா​ளோ
கவி​தை வரிகளின்
நயத்தில் . . .
மன​தை
தரிசித்துக் ​கொண்டிருக்கி​றேன் . . .
உண்​மை​யை உணராமல்
சிறகுகள்
எங்​கோ . . .
​தொ​லை துரத்தில்
இ​சைத்துக் ​கொண்டிருந்தது,

                                           மு. ஆ. பீர்ஓலி.
                                             19.09.2011

அல்லி இதழால் அவளுக்கு இசைத்திடடி . . .


காதல் மலர்கள்
நித்தி​ரை ​கொண்டிருக்கும்
நீர் பூத்த
இனி​மை நி​னைவுகள் . . .
பு​கை கவரி ​கொண்டு வருடுகி​றேன்.
தஞ்சம​டையும்
ஓவ்​வொரு வினாடியும்
அந்த பசு​மை நி​னைவுகள்
​வெளிப்பாடு.
               
பு​கையரும்புகள்
சுருள் ​கேசங்களாய்
பிரசவித்தது
பிரிவின் பிரளயத்​தை !
தரிசிக்கும்
ஓவ்​வொரு மு​றையும்
நி​னைவுகள் மட்டும்
எச்சமாய் ​தேங்கின.
தோ​கைகளின் வருடல்கள்
சமப்படுத்திய சுவடுகள் . . .
தேக​மெங்கும்
விரவிக் கிடக்கும்​
பைங்கிளிப் பார்​வைகள்.
​தோழியாய்
​தோள் ​கொடுத்து
து​ணையானாய் !..
காந்தள் ​மென்விரல்கள்
மீட்டிய இதய வீ​​ணை​
​சுருதி ​சேர்க்க
​சென்றதால்
இ​சைத்த ​சோக கீதம்.​

உருகும்
​வெண்​மைக் ​கோலம்
​வெள்​ளைப் புரவி​யென
இள​மைக் கனவுக​ள்
உயிர்ப்பித்த நாட்க​ளை
நி​னைவூட்டுகின்றன . . .

மலர்த் ​தோட்டம்
மலர்ந்தும் மலராத
அரும்புகள்
பனித்துளியின் சிலிர்ப்பு
பு​கை கவரி ​கொண்டு
நி​னைவுக​ளை வருடுகி​றேன்.
கனல்களாய் . . .
கண்ணீர்த் துளிகள்
நி​னைவூட்டும் அந்த அழகு
காயப்பட்ட மனது
அல்லி இதழால் அவளுக்கு இ​சைத்திடடி..

                                          மு. ஆ. பீர்ஓலி.
                                             18.09.2011

உண்மையை தேடி


தேடல்கள்
விடிய​லை எதிர்​ நோக்கி !
​தொ​லை தூரத்தில்
சிறு பற​வையின் தவம்.
புரியாத நிகழ்வுகள் . . .
உண்​மை​யைத்​தேடி
மீண்டும்
அந்த பயணம்.

நீல நிற சமுத்திரம்
விளிம்பில்
மிருதுவான ​மெத்​தை
ஈரகசிவு
மனதிற்குள் சிலிர்ப்பு.
உயரத்தில்
​மெல்லிய கீறலாய் . . .
தூரி​கையின் வர்ண ​கோலம்.
இயற்​கை வ​ரைந்த
அந்த ஓவியம்
இ​மைகளுக்குள்
சங்கமித்துக் ​கொண்டிருந்தது . . .
முடி திறந்த
விழிகள்
நிறமாறிக் ​​கொண்டிருக்கும்
இந்த பிரபஞ்சம்
படர்ந்து விரிந்தது.
உணர்வுகள் விழித்துக் ​கொண்டது !

விம்மல்கள் மட்டும்
​பெருகிக்​ ​கொண்டிருந்தன . . .
இருண்டு கிடந்தது சமுத்திரம்
​பொய்முகங்களின் தரிசனம்
தி​ரையிட்டது.
​வெப்பத்​தை கக்கிய
நிலவு
மனது கனத்தது . . .
மீண்டும் அந்த பயணம்
உண்​மை​யைத்​தேடி.
                                           மு. ஆ. பீர்ஓலி.
                                             17.09.2011

Thursday 15 September 2011

நித்தி​ரை பயணங்கள்


மலரின்  பயணம்...

கார் காலம்
படர்ந்து விரிந்த
​மேக சிறகுகள்
சி​றைப்பட்டிருக்கும் நிலவு
முறண்பாடுகள்
​செதுக்கிய
பரிணாம சுவடுகள்
ஒளியைத் ​தேடி
ஒரு  மலரின்
பயணம்  ​தொடங்கியது

                                                                    மு . ஆ.   பீர்ஒலி
                                                                                   16.09.2011



மலர்கிறது

இரவின் ​மைதியில்
உறக்கத்தின்  கைசிறையில்
பருவத்தின்  ​மொட்டு
கனவாய்  மலர்கிறது

நினைவின் நித்திரையில்
நிசப்த நீள்திரையில்
பரிசத்துச்  சுவர்க்கத்தில்
ப னி   அரும்பு  மலர்கிறது

ண்மையின்  ஒளிதன்னில்
உணர்ச்சியின்    உயிர்த்துடிப்பில்
தூய்மைக்  ​கொடிதன்னில்
​தெய்வீகம்   மலர்கிறது

ரும்மைத் தழுவல்களில்
வருத்த அழுத்தங்களில்
கண்ணீர்க் கதகதப்பில்
கவிதை மலர்கிறது
                                                                       மு . ஆ.   பீர்ஒலி                                                                                                                                                   16.09.2011

Wednesday 14 September 2011

IN THEE - I HOPE

Ye-
the blessed spirit
while I sat on thy lap
Frustrated-
thy send noble children
one after another
Clothed in heavenly brightness
to heel my wounds at heart.
But poor things
they could only wash my feet
with trickling tears
in vain pursuit.
I felt my heart
Throbbing-
more than thy roarings
at the human foibles.

I looked deep into
thy fathom
in measure
whether I can get
atleast-
A flicker of hope
that may aid thy noble born
in soothing the pain
Raging within selves

Alas!
where art thy helping hands
I felt the blossoms spread
around me.
Turned and looked around
and saw
Two lovely flowers
smiling at me
pleasant and lovely
a sight enduring
Noble and holy:

Where they have come from
No trace-
I thought
as though answered
What a hope
they sway along the breeze
Gently-
As the rhythm
Of a violin well tuned.
Now I heard them
speak in a voice
Melodious and Sweet
among themselves
and addressed me
in a tone friendly.
Felt I to be living force 
and tried to conceive
Their Languages
that sounded strange and new.

My heart
Spoke to me
Oh! man
Miss them not
Listen;
that are not ordinary being
But blessed
with heavenly graces.

Yea-
Is it so
I sharpened my senses
and looked ever deep
into their very being
What a ecstatic joy
And the Vision.
                                                            By Mohamed Adam Peeroli
                                                                               14 th Sep 2011